"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" - உணவளிக்கும் பணியில் போலீசார், தொண்டு நிறுவனங்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர் கூட சாலைகளில் கைவிடப்பட்ட நிலையில் இல்லை என்று மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழப்பால் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிகளிலும் திருமண மண்டபங்களிலும் ரயில் நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 21 ஆயிரம் முகாம்களில சுமார் 7 லட்சம் பேருக்கு உணவு பரிமாறப்படுகிறது. டெல்லி, கோரக்புர் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல நூறு பேருக்கு உணவளித்து வருகின்றன. அமிர்தசரஸ் பொற்கோவிலிலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் 3 வேளையும் லங்கர் எனப்படும் பிரசாத உணவை வாங்கிச் செல்கின்றனர். இதே போன்று ஹைதராபாதிலும் போலீஸ்காரர்கள் உணவு சமைத்து இல்லாதவர்களுக்குப் பரிமாறுகின்றனர்
Comments